சர்வதேச அளவில் கொண்டாடப்படும் தனுஷின் ராயன்
2 ஆவணி 2024 வெள்ளி 13:10 | பார்வைகள் : 6800
நடிகனாக பல்வேறு சாதனைகளை படைத்த தனுஷ், தற்போது இயக்குனராக தன்னுடைய திறமையை நிரூபித்து மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். ராயன் அவர் இயக்கிய இரண்டாவது படமாக இருந்தாலும், அப்படத்தில் தான் அவர் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
அவர் இயக்கிய ராயன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது. ரிலீஸான ஆறே நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டி உள்ளது ராயன். தனுஷ் இயக்கிய படங்களில் 100 கோடி வசூலித்த முதல் படம் இதுவாகும்.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமா வரலாற்றில் ஏ சான்றிதழ் பெற்று, ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படம் ராயன் என்கிற சாதனையையும் அப்படம் படைத்துள்ளது. ஒருவாரத்தை கடந்தும் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது ராயன். ராயன் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வரும் இந்த சமயத்தில் மற்றுமொரு ஸ்வீட்டான விஷயத்தை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி நூலகத்தில் இடம்பெற தேர்வாகி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ராயன் படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan