ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் - குவிந்த மக்கள் கூட்டம்

1 ஆவணி 2024 வியாழன் 17:42 | பார்வைகள் : 6103
இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ்தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் உடலிற்கான பிரார்த்தனைகளிற்கு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயதொல்லா அலி கமேனி தலைமை தாங்குகின்றார்.
இந்நிலையில் ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் அசாடி சதுக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பின்னர் ஹமாஸ் தலைவரின் உடல் கட்டார் தலைநகர் டோகாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிநிகழ்வுகள் இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது.