இஸ்ரேலை பழிதீர்க்க காத்திருக்கும் ஈரான் தலைவர்

1 ஆவணி 2024 வியாழன் 10:04 | பார்வைகள் : 6777
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேலை பழிதீர்ப்போம் என ஈரான் தலைவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்ட நிலையில் இதற்கு எதிராக பதிலடி கொடுப்போம் என அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில், ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளாவது , ''இஸ்மாயில் ஹனியே எங்கள் அன்பிற்குரிய விருந்தாளியாக இருந்தார். தெஹ்ரானில் அவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தனக்கென ஒரு கடுமையான தண்டனையை தயார் செய்து கொண்டுள்ளது.
இஸ்ரேலை பழிவாங்குவது ஈரானின் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஹனியேயை கொலை செய்தது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகாத நிலையில், இஸ்ரேல் தான் இந்த படுகொலையை செய்ததாக ஈரான், துருக்கி, கத்தார் போன்ற நாடுகளும் இஸ்ரேலை குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025