Paristamil Navigation Paristamil advert login

 பாலிவுட் நடிகருக்கு நடனத்தில் சவால் விடும் முத்தையா முரளிதரன்! 

 பாலிவுட் நடிகருக்கு நடனத்தில் சவால் விடும் முத்தையா முரளிதரன்! 

31 ஆடி 2024 புதன் 09:54 | பார்வைகள் : 7802


இந்தி பாடல் ஒன்றுக்கு  இலங்கை ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அசத்தலாக நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது. 

சமீபத்தில் வெளியான Bad Newz என்ற இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற 'Tauba Tauba' என்ற பாடல் பிரபலமானது.

இப்பாடலில் நடிகர் விக்கி கௌஷலின் அபாரமான நடனம் ரசிகர்களை கவர்ந்ததால், இந்த பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில்  இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 'Tauba Tauba' பாடலுக்கு விக்கி கௌஷலுக்கு சவால் விடும் வகையில் நடனமாடியுள்ளார். 

அவரது நடன அசைவுகளைக் கண்டு நெட்டிசன்கள் மிரண்டுபோயினர். ''முரளிதரன் இவ்வளவு சிறந்த நடனக் கலைஞர் என்று ஒருபோதும் அறியவில்லை'' என்று நெட்டிசன் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். 

அதேபோல் பலரும் அவரின் நடனத்தைப் பார்த்து வியந்து கருத்துக்களை கூறி, வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

52 வயதாகும் முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றி, இதுவரை எவரும் நெருங்க முடியாத சாதனையை தன்னகத்தே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்