Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ODI அணி அறிவிப்பு

இலங்கை ODI அணி அறிவிப்பு

31 ஆடி 2024 புதன் 09:47 | பார்வைகள் : 8630


இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள  இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Pallekeleவில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இலங்கை தோல்வியுற்று, தொடரை முழுமையாக இழந்தது. 

முதலில் ஆடிய இந்திய அணி 137 ஓட்டங்கள் எடுக்க, இலங்கையும் 137 ஓட்டங்கள் எடுக்க ஆட்டம் டை ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. 

இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 2 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க, இந்தியா 4 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் சமிகா கருணாரத்னே, ஜனித் லியானகே உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

அணி விபரம்

சரித் அசலங்கா
பதும் நிசங்கா
அவிஷ்கா பெர்னாண்டோ
குசால் மெண்டிஸ்
சதீரா சமரவிக்ரமா
கமிந்து மெண்டிஸ்
வணிந்து ஹசரங்கா
நிஷான் மதுஷ்கா
துணித் வெல்லலாகே
சமிகா கருணாரத்னே
ஜனித் லியானகே
மஹீஷ் தீக்ஷணா
அகில தனஞ்ஜெயா
தில்ஷன் மதுஷன்கா
மதீஷா பத்திரனா
அசிதா பெர்னாண்டோ  
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்