சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியான தமிழர்
2 புரட்டாசி 2023 சனி 02:53 | பார்வைகள் : 10732
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
70.4 சதவீத வாக்குகளை பெற்று அவர் 9வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளதாக சிங்கப்பூர் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவர் 2011ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் பிரதி பிரதமராக கடமையாற்றியுள்ளார்.
இதுதவிர, நிதி, கல்வி மற்றும் மனிதவள அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் தர்மன் சண்முகரட்ணம் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக்குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
இந்தநிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட எங் கொக் சாங் 15.72 சதவீத வாக்குகளையும், டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan