இலங்கையில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் மீண்டும் கொவிட் விதிமுறைகள்
30 ஆடி 2024 செவ்வாய் 12:16 | பார்வைகள் : 7197
நாட்டில் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக அதிகரித்து வருவதால் கொவிட் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவிக்கையில்,
"சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் முகக் கவசங்களை அணிய வேண்டும், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும், பொது போக்குவரத்து உள்ளிட்ட சன நெரிசலான இடங்களில் இடைவெளியை பேண வேண்டும்.
பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகளவு பரவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களைப் பாடசாலைகள் அல்லது குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல், குளிர், தலைவலி, மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, தசை அல்லது உடல் வலி, குமட்டல், சோர்வு, பசியின்மை மற்றும் தொண்டை வலி ஆகியவை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளாகும் என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan