வெளிநாடு செல்ல காத்திருந்த முல்லைத்தீவு இளைஞன் சடலமாக மீட்பு
30 ஆடி 2024 செவ்வாய் 12:15 | பார்வைகள் : 5381
வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று வடக்கில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன், வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
20 லட்சம் பணத்துடன் யோக புறத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு திங்கட்கிழமை (29) பிற்பகல் சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளதாகவும் பின்னர் அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை என்றும் அறியமுடிகின்றது.
குறித்த இளைஞரின் தொடர்பு கிடைக்காத நிலையில் அவரது நண்பர்கள் தேடியபோது செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கிள் இனங்காணப்பட்டுள்ளது.
அதன்பின்னர் தேடியதை தொடர்ந்து வவுனிக்குளத்தின் மூன்றாவது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) உடலம் இனங்காணப்பட்டு பிரதேச வாசிகளால் உடலம் மீட்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan