மகளை பதவியில் அமர்த்த வடகொரிய ஜனாதிபதி திட்டம் - காரணம் என்ன...?
30 ஆடி 2024 செவ்வாய் 11:57 | பார்வைகள் : 9645
வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உனின் உடல் நிலை மோசமாகிவருவதால், தனது மகளை அடுத்து பதவியில் அமர்த்துவதற்கான திட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக தென்கொரிய உளவாளிகள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன் பொது இடங்களில் தன் மகளுடனேயே தோன்றும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.
மீண்டும் உடல் அதிக அளவில் பெருத்து காணப்படும் கிம்முக்கு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய பிரச்சினைகள் இருக்கின்றன.
அவரது உடல் எடை 140 கிலோவாக அதிகரித்துள்ளது.
தனது உடல் நிலை மோசமாகிக்கொண்டே வருவதால், தனக்குப் பின் தனது பதவியில் அமர தனது மகளை அவர் பயிற்றுவித்து வருவதாக நம்பப்படுகிறது.
விடயம் என்னவென்றால், கிம் மகளுடைய வயது 11 ஆக காணப்படுகின்றது.
கிம் ஜாங் உன்னுக்கு மதுப்பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் உள்ளன.
2011ஆம் ஆண்டு, அவரது தந்தையான Kim Jong-il மாரடைப்பால் மரணமடைந்த நிலையில் கிம் பதவிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கிம்முடைய தாத்தாவான Kim Il-sungக்கும் 1994ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது.
ஆக, தன் குடும்பத்தினருக்கு இப்படி உடல் நல பிரச்சினைகள் இருந்ததால், தனக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்படலாம் என கருதும் கிம், தனது மகளை எதிர்கால வடகொரிய ஜனாதிபதியாக்குவதற்காக, அவரை இப்போதே பயிற்றுவிப்பதாக கருதப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan