Paristamil Navigation Paristamil advert login

விஜயுடன் ரம்பா மீண்டும் கூட்டணியா?

 விஜயுடன் ரம்பா மீண்டும் கூட்டணியா?

29 ஆடி 2024 திங்கள் 14:03 | பார்வைகள் : 5448


நடிகை ரம்பா திருமணத்திற்குப் பிறகு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றினார். இந்நிலையில் நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய், ரம்பாவையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். 

இவர்களின் திடீர் சந்திப்பு ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதாவது நடிகை ரம்பா மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்கப் போகிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா.....மீண்டும் விஜயுடன் கூட்டணியா?தற்போது கிடைத்த தகவலின் படி நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாகவும் அப்படி நடித்தால் தன்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் பேசப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாராம். 

அதன்படி சிறிய கதாபாத்திரங்களிலும், கேமியோ தோற்றத்திலும் நடிக்க மாட்டேன் எனவும் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் எனவும் சொல்லி இருக்கிறாராம் ரம்பா. எனவே இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ரம்பாவை மீண்டும் திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்