Paristamil Navigation Paristamil advert login

அஸ்வினுக்கே Mankad எச்சரிக்கை விடுத்த வீரர்...! 

அஸ்வினுக்கே Mankad எச்சரிக்கை விடுத்த வீரர்...! 

29 ஆடி 2024 திங்கள் 12:21 | பார்வைகள் : 4130


TNPL போட்டி ஒன்றில் அஸ்வினுக்கு மன்கட் விடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நேற்றையப் போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் நெல்லை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியை வீழ்த்தியது.

ரவிச்சந்திரன் அஸ்வின் 15 ஓட்டங்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். முன்னதாக அவர் 15வது ஓவரில் Non strikeயில் இருந்தார். 

அந்த ஓவரை வீசிய நெல்லை பந்துவீச்சாளர் மோகன் பிரசாந்த், பந்துவீச வரும்போது அஸ்வின் கிரீஸை விட்டு வெளியேற முயற்சித்தார்.

அப்போது மோகன் பிரசாந்த் அவரை மன்கட் செய்து விடுவேன் என்று எச்சரிக்கை செய்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.           

வர்த்தக‌ விளம்பரங்கள்