■ நாளை 40°C வெப்பம்!
28 ஆடி 2024 ஞாயிறு 20:02 | பார்வைகள் : 9231
நாளை திங்கட்கிழமை பிரான்சில் 40°C எனும் இவ்வருடத்தின் அதிகூடிய வெப்பம் பதிவாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக 38°C வரை வெப்பம் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்திருந்த நிலையில், நாளை வெப்பம் மற்றும் அனல் காற்று அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரான்சின் தென்மேற்கு பகுதிகளில் இந்த வெப்பம் பதிவாகும் எனவும், ஸ்பெயினில் இருந்து பிரான்சுக்குள் அனல் காற்று நுழைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Landes மாவட்டத்தின் Roquefort மற்றும் Maillas ஆகிய நகரங்களில் நாளை இந்த 40°C வெப்பம் பதிவாகும் எனவும், ஏனைய பகுதிகளில் 38°C, 37°C போன்ற வெப்பங்களும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்து வரும் செவ்வாய், புதன்கிழமைகளிலும் இதுபோன்ற வெப்பம் பதிவாகலாம் எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan