பேராசிரியர்கள் மோசடி: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப கவர்னர் உத்தரவு

28 ஆடி 2024 ஞாயிறு 16:19 | பார்வைகள் : 5236
அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் கல்லூரிகளுக்கு அவசியம்
இதற்காக போலி நியமனங்கள் மூலம் தனியார் கல்லூரிகள் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்
போலி ஆவணங்களை வைத்து 353 பேராசிரியர்கள் 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவது கண்டுபிடிப்பு
ஒரே சமயத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றும் டாப் 5 பேராசிரியர்களின் பட்டியல் வெளியீடு
பேராசிரியர்கள் மாரிச்சாமி, முரளிபாபு ஆகியோர் தலா 11 கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர்
அரங்கநாதன், வெங்கடேசன், வசந்தா சுவாமிநாதன் ஆகிய பேராசிரியர்களுக்கு தலா 10 கல்லூரிகளில் வேலை
மொத்தம் 2000 ஆசிரியர் பணியிடங்களை வெறும் 189 பேர் ஆக்கிரமித்துள்ளனர்
மோசடியில் ஈடுபட்ட கல்லுாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.
கவர்னர் உத்தரவு
விசாரணையின் அடிப்படையில் விளக்கம் கேட்டு கல்லுாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப கவர்னர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025