Paristamil Navigation Paristamil advert login

ஆக்சன் கிங் அர்ஜுன் சீரியலில் களமிறங்குகிறாரா ?

ஆக்சன் கிங் அர்ஜுன் சீரியலில் களமிறங்குகிறாரா ?

28 ஆடி 2024 ஞாயிறு 07:57 | பார்வைகள் : 8004


ஆக்சன் கிங் அர்ஜுன் கடந்த 90கள், 2000ஆம் ஆண்டுகளில் பல அதிரடி ஆக்சன் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது கூட அவர் சில பிரபலங்களின் படங்களில் முக்கிய இடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் சீரியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. அர்ஜுன் சொந்தமாக ஒரு சீரியல் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருப்பதாகவும் இதன் மூலம் சீரியலை அவரே தயாரித்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அர்ஜுன் சீரியல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்பட வைப்பதாகவும் தெரிகிறது.

இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்து தயாரித்து இயக்கும் இந்த சீரியல் நிச்சயம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’சர்வேயர்’ என்ற ரியாலிட்டி ஷோவை அர்ஜுன் நடத்திய நிலையில் மீண்டும் ஜீ தமிழ் சேனலில் சீரியல் மூலம் ரீஎண்ட்ரி ஆகவுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்