Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

டெஸ்டில் இமாலய சாதனை படைத்த ஜோ ரூட்...! 

டெஸ்டில் இமாலய சாதனை படைத்த ஜோ ரூட்...! 

28 ஆடி 2024 ஞாயிறு 05:35 | பார்வைகள் : 9573


இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் 12,000 ஓட்டங்களை கடந்தார்.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.

தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அரைசதம் விளாசினார்.  

அதிரடியாக ஆடிய ஸ்டோக்ஸ் 69 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அரைசதம் விளாசிய ஜோ ரூட் (Joe Root) 12,000 ஓட்டங்களை கடந்தார். 

இதன்மூலம் இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற இமாலய சாதனையை படைத்தார்.


அலாஸ்டைர் குக் 33 வயது 13 நாட்களில் 12,000 ஓட்டங்கள் எட்டிய நிலையில், ஜோ ரூட் 33 வயது 210 நாட்களில் எட்டியுள்ளார். 

அதேபோல் குறைந்த இன்னிங்ஸ்களில் 12,000 ஓட்டங்களை எட்டிய 6வது வீரர் என்ற சாதனையையும் ரூட் படைத்துள்ளார். 

இந்தப் பட்டியலில் இலங்கையின் குமார் சங்கக்காரா (224) முதலிடத்தில் உள்ளார். 

அதிவேகமாக 12,000 ஓட்டங்கள் எட்டிய வீரர்கள்

குமார் சங்கக்காரா ( இலங்கை) - 224
ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 247
சச்சின் டெண்டுல்கர் - 247
ஜாக்யூஸ் கல்லில் - 249
ராகுல் டிராவிட் - 255
ஜோ ரூட் - 261
அலாஸ்டைர் குக் - 275    
 

வர்த்தக‌ விளம்பரங்கள்