Paristamil Navigation Paristamil advert login

இலங்கை கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

28 ஆடி 2024 ஞாயிறு 02:04 | பார்வைகள் : 13287


கல்வி சீர்திருத்த முன்மொழிவு தொடர்பில் 2025ஆம் ஆண்டின் முதல் தவணை முதல்  பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இலிருந்து 12 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மாணவர்கள் 17 வயதிற்குள் பாடசாலை கல்வியை முடிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை மதிப்பீடுகளுக்கு புள்ளிகளையும் பரீட்சைகளுக்கு குறிப்பிட்ட சதவீத புள்ளிகளையும் வழங்கி பரீட்சையை இலகுபடுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. 

மேலும், கல்வி பொதுத்தராதர சாதாரண தர தேர்விற்கான பாடங்களை 9 இல் இருந்து 7 ஆக குறைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்