Google Doodle - உலகளாவிய ஒலிம்பிக் நிகழ்வை கொண்டாடும் கூகுள்
26 ஆடி 2024 வெள்ளி 11:49 | பார்வைகள் : 901
பாரிஸில் ஆரம்பமாகவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை கொண்டாடும் வகையில் டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள்.
இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை பாரிஸ் நடத்துகிறது.
விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நிகழ்விற்கான எதிர்பார்ப்பைப் பகிர்ந்துகொள்வதால், பல்வேறு தளங்களில் உற்சாகமான பதிவுகள் குவிந்துள்ளன.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், Google நிறுவனமானது அதன் முகப்புப் பக்கத்தில் "கூகுள்" லோகோவிற்குப் பதிலாக சில விலங்குகள் கோடைகால விளையாட்டுகளை விளையாடுவதைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதைக் கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் பாரீஸ் ஒலிம்பிக் 2024 இன் சமீபத்திய பதிகளை பார்க்கலாம்.
ஒலிம்பிக் போட்டிகள் இன்று பாரீஸ் நகரில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகவிருக்கிறது. ஜூலை 26 திறப்பு விழா பாரிஸ் வழியாக பாயும் செயின் நதியில் நடைபெறும்.
கொடிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு உள்ளிட்ட நிறைவு விழா ஒகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.