Évion எனும் பெயருக்கான காரணம்
1 புரட்டாசி 2023 வெள்ளி 11:25 | பார்வைகள் : 4375
'எவியன்’ தண்ணீர் போத்தலை தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள்.
பிரான்சின் பிரபல்யமும் பாரம்பரியமும் மிக்க தண்ணீர் போத்தல் உற்பத்தி நிறுவனம் அது. எதனால் ‘எவியன்’ எனும் பெயர் வந்தது தெரியுமா?
Évian-les-Bains என்கிற
ஒரு சிறிய கிராமம் கிழக்கு பிரான்சில், சுவிஸ் நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. அங்கிருந்துதான் 1829 இல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. சுத்தமான மற்றும் இயற்கைச் சுவையுடன் கூடிய இந்த தண்ணீர், உலகம் முழுவதுமே பிரபலம் மிக்கது.
இதற்கான நீர் எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா? ஐரோப்பாவின் மிகப் பெரும் ஏரிகளில் ஒன்று Lake Geneva. இதனை le Léman என்றும் lac de Genève என்றும் அழைப்பார்கள். சுவிஸுக்கும் பிரான்ஸுக்கும் நடுவில் அமைந்துள்ள இந்த ஏரியின் 60% பங்கு அவர்களுக்கும் ( சுவிஸுக்கு ) 40% பங்கு நமக்கும் ( பிரான்ஸுக்கு ) சொந்தம்.
இந்த ஏரியில் இருந்துதான் தனக்குத் தேவையான நீரை Évion எடுத்துக்கொள்கிறது. தினமும் 6 மில்லியன் போத்தல்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்துவருகிறது.
சிறந்த தண்ணீருக்கான பல விருதுகளை வென்றிருக்கும் எவியன் உலக சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலரின் அபிமான தெரிவாக உள்ளது.