சுவிட்சர்லாந்தில் ரயில் பயணங்களை மேற்கொள்வோருக்கு முக்கிய அறிவிப்பு
24 ஆடி 2024 புதன் 10:04 | பார்வைகள் : 2726
சுவிட்சர்லாந்தில், ரயிலில் பயணம் செய்யும் வழக்கமுடையவர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில், பல்வேறு காரணங்களால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட உள்ளது.
வரும் வாரங்களில், மேற்கு சுவிட்சர்லாந்தில், பல்வேறு ரயில் பாதைகளில் கட்டுமானப் பணி நடைபெற இருப்பதால், பல ரயில்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது ரயில் நேரங்களில் காலதாமதம் ஏற்படலாம்.
குறிப்பாக, Vaud மற்றும் Valais மாகாணங்களுக்கிடையில் பயணிக்கும் ரயில்கள் பல, ஜூலை மாதம் 22 ஆம் திகதி முதல் ஆகத்து மாதம் 14ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட உள்ளன.
ஆகவே, பயணிகள் அதற்கேற்ப மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்வது நல்லது.