அமெரிக்க அதிபர் பைடன் தொடர்பில் வெளியாகிய வதந்தி...!
24 ஆடி 2024 புதன் 09:13 | பார்வைகள் : 2036
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் உயிரிழந்து விட்டதாக போலி தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குத்துச்சண்டை வீரர் ரியான் கார்சியாவின் தவறான ட்வீட் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
ஜனாதிபதி ஜோ பிடன் தற்போது COVID-19 இலிருந்து மீண்டு வருகிறார் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொலைதூரத்தில் தனது கடமைகளைச் செய்து வருகிறார்.
இந்தத் தகவல் அவரது அலுவலகத்தால் பகிரங்கமாக வெளியிடப்பட்டது.
தொழில்முறை குத்துச்சண்டை வீரரான ரியான் கார்சியா, ஜோ பிடன் காலமானார் என்று தவறான கூற்றை ட்வீட் செய்துள்ளார்.
குத்துச்சண்டை வீரரின் டிவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில் பொய்யான தகவலை பரப்பிய குற்றசாட்டிற்காக கார்சியா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.