Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி..

 அமெரிக்காவில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி..

23 ஆடி 2024 செவ்வாய் 10:16 | பார்வைகள் : 7965


அமெரிக்காவில் மிஸிஸிப்பி மாகாணத்தின் இண்டினோலாவில் உள்ள Church Street பகுதியில் இரவுவிடுதிக்கு வெளியே மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விடுதிக்கு வெளியே இருந்த மக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 

டசன் கணக்கான துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக கூறப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 

அவர்கள் 19 வயதுடைய இளைஞர்கள் என இண்டினோலா மேயர் Ken Featherstone உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும், 16 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை இச்சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்