கனடாவில் பாரிய தீ விபத்து

23 ஆடி 2024 செவ்வாய் 10:12 | பார்வைகள் : 5436
கனடாவில் ஹமில்டன் தீ விபத்து இடம்பெற்றதில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் சுமார் 173 பேர் இடம் பெயர நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹன்ட மற்றும் ஜாக்சன் வீதிகளுக்கு அருகாமையில் காணப்படும் YMCA குடியிருப்பு தொகுதியில் இந்த தீ விபத்து இடம் பெற்றுள்ளது.
கட்டிடத்தின் இரண்டாம் மூன்றாம் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது தீ விபத்து காரணமாக கட்டடத்திற்கு பாரியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து காரணமாக கட்டடத்தின் பல மாடிகளுக்கும் புகை பரவியதாகவும் இதனால் பலர் அசோகரியங்களை எதிர் நோக்க நேரிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தீயணைப்பு பணியில் இணைந்து கொண்டிருந்தனர்.
தீ விபத்து காரணமாக இருப்பிடங்களை இழந்து இடம் பெயர்ந்தவர்கள் YMCA கட்டிடத்தில் பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025