இலங்கையில் தாய் - இரு பிள்ளைகளை பலியெடுத்த குழி
22 ஆடி 2024 திங்கள் 12:46 | பார்வைகள் : 12544
ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம காவந்திஸ்ஸ புர பகுதியில் நீர் நிரம்பிய கற்குழிக்குள் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாயும் இரண்டு பிள்ளைகளும் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
32 வயதுடைய தாய், 14 வயது மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தாயின் சடலம் நேற்றையதினம் இரவு கண்டெடுக்கப்பட்டதோடு, இரு பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan