இரு குழுக்களுக்கிடையே மோதல்.. ஒருவர் பலி.. 11 பேர் கைது..!
21 ஆடி 2024 ஞாயிறு 13:53 | பார்வைகள் : 24118
நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற குழு மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Val-de-Marne மாவட்டத்தில் உள்ள இரு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள், நேற்று ஜூலை 20 சனிக்கிழமை இரவு மோதலில் ஈடுபட்டிருந்தனர். இந்த மோதலின் போது கத்தி போன்ற கூரான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Créteil நகரில் உள்ள Place de l'Abbaye வீதியில் வைத்து இந்த மோதல் இடம்பெற்றதாகவும், அருகே இருக்கும் சிறு நகர இளைஞர்களோடு நீண்டகாலமாக மோதல் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோதலில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan