Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகள் : அச்சுறுத்தல் எதுவும் இல்லை.. உள்துறை அமைச்சர் தகவல்...!!

ஒலிம்பிக் போட்டிகள் : அச்சுறுத்தல் எதுவும் இல்லை.. உள்துறை அமைச்சர் தகவல்...!!

20 ஆடி 2024 சனி 19:45 | பார்வைகள் : 4426


ஒலிம்பிக் போட்டிகளின் போது குறிப்பிடத்தக்க அளவு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என உள்துறை அமைச்சர் Gérald Darmani  அறிவித்துள்ளார்.

26 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற உள்ள நிலையில், 'ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி இடம்பெறும். சொல்லிக்கொள்ளும்படியான எந்த அச்சுறுத்தலும் இல்லை. சென் நதியின் வேகம், வானிலை போன்ற காரணங்கள் தவிர்த்து வேறு எந்த திட்டமிடல்களிலும் குழப்பங்கள் இல்லை!' என அமைச்சர் தெரிவித்தார். 

ஒலிம்பிக் போட்டிகளுக்காக இதுவரை சந்தேகத்துக்கிடமான  960,000 பேர் சோதனையிடப்பட்டுள்ளனர்.  இவர்களில் 4,000 பேர் ஒலிம்பிக் இடம்பெறும் காலத்தில் இல் து பிரான்சின் வெளியே வசிக்க வேண்டும்.எனவும், அவர்களில் 139 பேர் தேசிய கண்காணிப்பு பட்டியலில் (fichés S) உள்ளவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்