அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி ?

20 ஆடி 2024 சனி 16:06 | பார்வைகள் : 5487
நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் தொடர் தோல்வியைத் சந்தித்து வந்தன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த 'மகாராஜா' படம் மீண்டும் அவரை வெற்றி பாதைக்கு திருப்பி உள்ளது.
அதோடு இந்த படம் அவருக்கு முதல் ரூ.100 கோடி வசூல் என்ற அங்கீகாரத்தையும் தந்துள்ளது. தற்போது விடுதலை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அட்லியின் ஏ பார் ஆப்பிள் நிறுவனம் மூலம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இதனை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.