பரிஸ் : கட்டிடத்தில் திடீரென பரவிய தீ ... தீயணைப்புபடையினர் குவிப்பு..!

20 ஆடி 2024 சனி 13:45 | பார்வைகள் : 6583
பரிஸ் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று இன்று ஜூலை 20, சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்துள்ளது.
rue du Sentier மற்றும் rue des Jeûneurs வீதிகளை இணைக்கும் முனையில் உள்ள ஆறு அடுக்கு கட்டிடம் ஒன்றின் ஆறாவது தளத்தில் இன்று பிற்பகல் தீ பரவியது. உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தீ அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
காயமடைந்தவர்களின் விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
பெருமளவிலான புகை எழுவதை புகைப்படங்களாக பொதுமக்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.