Bobigny : துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி..!
20 ஆடி 2024 சனி 07:00 | பார்வைகள் : 4131
Bobigny (93) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று ஜூலை 19, வெள்ளிக்கிழமை இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. Chemin-Vert பகுதியில் உள்ள வீதி ஒன்றில் இரவு 10 மணி அளவில் நின்றிருந்த குழுவினர் சிலர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர். இதில் மூவர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்கள் 25 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், மூன்றாவது நபர் 27 வயதுயவர் எனவும் - படுகாயமடைந்த நிலையில் அவர் பரிசில் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Georges Pompidou மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச்சூடு இது எனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.