யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் குழந்தை பிரசவித்த பெண்

19 ஆடி 2024 வெள்ளி 12:52 | பார்வைகள் : 6145
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் பெண்ணொருவர் நேற்று முன்தினம் குழந்தை பிரசவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து , அம்புலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
படகில் மருத்துவ அதிகாரி , மருத்துவமாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி அழைத்து வந்துள்ளனர்.
அதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார்.
தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிகாட்டுவான் அழைத்து வந்து , அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளார் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.
தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025