Paristamil Navigation Paristamil advert login

trottinette விபத்தில் 12 வயது சிறுமி பலி

trottinette விபத்தில் 12 வயது சிறுமி பலி

1 புரட்டாசி 2023 வெள்ளி 10:03 | பார்வைகள் : 5430


trottinette ஒன்றில் பயணித்த 12 வயது சிறுமி ஒருவர் விபத்தில் சிக்கிபலியாகியுள்ளார்.

புதன்கிழமை மாலை Chessy (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம்இடம்பெற்றுள்ளது. மாலை 6 மணி அளவில் boulevard du Grand-Fossé பகுதியில்பயணித்த மகிழுந்து ஒன்றுடன் மின்சாரத்தில் இயங்கும் சிறியரக வாகனஈருருளியான  trottinette இல் பயணித்த 12 வயது சிறுமி மோதுண்டுள்ளார்.

படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனடியாக மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டன. மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டார். அவருக்குமதுபோதை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் மதுஅருந்தியிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.


தொடர்புடைய செய்தி : பரிசில் trottinette இற்குத் தடை!

வர்த்தக‌ விளம்பரங்கள்