Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஜப்பானில் 18+ சிப்ஸ் சாப்பிட்ட  மாணவர்களுக்கு நேர்ந்த கதி

ஜப்பானில் 18+ சிப்ஸ் சாப்பிட்ட  மாணவர்களுக்கு நேர்ந்த கதி

19 ஆடி 2024 வெள்ளி 11:00 | பார்வைகள் : 9143


ஜப்பானின் ரொகு கோகா உயர்நிலைப் பள்ளியில்(Rokugo Koka High School) மிகவும் காரமான உருளைக்கிழங்கு சிப்ஸ்களை சாப்பிட்ட 14 மாணவர்கள் வயிற்று வலி, வாய் வலி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை அனுபவித்ததால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

பள்ளிக்கு 18+ கறி சிப்ஸ் என்று பொறிக்கப்பட்ட காரமான சிப்ஸ்களைக் கொண்டு வந்த மாணவர் ஒருவர், அதை சுமார் 30 மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டுள்ளார்.

சிப்ஸின் அதிகப்படியான காரம் காரணமாக பெரும்பாலான மாணவர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது, இதையடுத்து மாணவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆவார்கள், அவர்களுக்கு லேசான அறிகுறிகளே இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த சிப்ஸ் இபாரகி(Ibaraki) மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்ட ஐசோயாமா கார்ப்பரேஷன்(Isoyama Corporation) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் 18 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் மிகக் காரமான தயாரிப்புகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது.

மேலும் மசாலா பிரியர்கள் அவற்றை சாப்பிடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறது.

இந்த சிப்ஸ்களில் உலகின் மிக காரமான மிளகு வகைகளில் ஒன்றான பூத ஜலக்கியா(ghost pepper, or bhut jolokia) எனப்படும் மிளகு வகை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது டாபஸ்கோ சாஸை(tabasco sauce) விட 170 மடங்கு காரமானது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்