Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

 பிரித்தானியாவின் புதிய பிரதமரின் திட்டம் ...

 பிரித்தானியாவின் புதிய பிரதமரின் திட்டம் ...

19 ஆடி 2024 வெள்ளி 10:57 | பார்வைகள் : 8041


பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா  மற்றும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்துவது தொடர்பில்  முந்தைய அரசின் திட்டமிட்டு இருந்தது.

ஆனால், அந்த திட்டத்தை புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் ரத்து செய்துவிட்டார். ஆனால், அந்த திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களின் நிலை என்ன?

ருவாண்டா திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், அத்திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான உள்துறை அலுவலக அலுவலர்களுக்கு, புதிதாக ஒரு பணி கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை விரைவாக நாடுகடத்தும் பணிக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

சட்டவிரோத புலம்பெயர்தலை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று கூறியுள்ள ஸ்டார்மர், அதற்காக பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு விடயத்தில் ஐரோப்பாவுடனான கூட்டுறவை அதிகரிக்க இருப்பதாகவும், ஆட்கடத்தல் கும்பல்களை பிடிப்பதில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறு படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அதை தடுப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 84 மில்லியன் பவுண்டுகள் செலவிட இருப்பதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதாவது, சிரியா நாட்டு புலம்பெயர்வோர் பிரித்தானியா நோக்கி வருகிறார்கள்.


ஆகவே, ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலிருக்கும் சிரிய அகதிகளுக்கு கல்வி மற்றும் வேலை கிடைக்கும் வகையில் திட்டங்களுக்காக நிதி உதவி செய்யவும்,

வட மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்வோரை, அவர்கள் நாட்டிலேயே திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படும் இடத்தில் பணியமர்த்தவும், போரால் இடம்பெயர்ந்துள்ள சூடான் நாட்டு மக்களுக்கு மனிதநேய உதவிகள் செய்யவும் திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்