Paristamil Navigation Paristamil advert login

கடலில் மூழ்கி அகதி பலி.. 85 பேர் உயிருடன் மீட்பு..!

கடலில் மூழ்கி அகதி பலி.. 85 பேர் உயிருடன் மீட்பு..!

19 ஆடி 2024 வெள்ளி 08:26 | பார்வைகள் : 3626


Calais (Pas-de-Calais) பகுதியில் இருந்து பிரித்தானியா நோக்கிச் செல்ல முற்பட்ட அகதி ஒருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். மேலும் 85 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

நேற்று ஜூலை 18 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. CROSS என அழைக்கப்படும் தேசிய கண்காணிப்பு மற்றும் மீட்புக்குழு மையம் (Centre régional opérationnel de surveillance et de sauvetage) இந்த மீட்புப்பணியை மேற்கொண்டிருந்தது. சிறிய மீன்பிடி படகு ஒன்றில் பலர் பிரித்தானியாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அகதிகள், தண்ணீருக்குள் மூழ்கியதாக கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் விரைந்து சென்று காப்பாற்றியுள்ளனர்.

மொத்தமாக 85 பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்