Paristamil Navigation Paristamil advert login

கனடாவில்  கோர விமான விபத்து - இருவர் பலி

கனடாவில்  கோர விமான விபத்து - இருவர் பலி

19 ஆடி 2024 வெள்ளி 08:08 | பார்வைகள் : 1440


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் டொபினோ பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லாங் பீச் விமான நிலையத்திலிருந்து விபத்து குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தீ பற்றி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆறு பேர் பயணிக்க கூடிய ஓர் சிறிய விமானத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம் புறப்பட்டு செல்ல எத்தனித்த போது விமானத்தின் எஞ்சினில் தீ பற்றி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமான விபத்து தொடர்பில் கனடிய போக்குவரத்து பாதுகாப்பு சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விமானத்திற்கான விமான விபத்திற்கு சரியான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்