இலங்கையில் இந்த வாரம் முதல் கடவுச் சீட்டு வழங்க புதிய முறை

18 ஆடி 2024 வியாழன் 11:23 | பார்வைகள் : 6808
கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை வெள்ளிக்கிழமை (19) முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் நலனுக்காகவும் செயல்முறையை சீரமைக்கவும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்கள் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.
ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கடவுச் சீட்டு வழங்கும் புதிய முறை வெள்ளிக்கிழமை (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025