ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில்!
17 ஆடி 2024 புதன் 15:17 | பார்வைகள் : 772
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்ட அவர், தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளால் ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனுவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.