Paristamil Navigation Paristamil advert login

160 கிலோமிற்றர் தூக்கத்தில் நடந்து சென்ற சிறுவன்! அரிய நிகழ்வு

160 கிலோமிற்றர் தூக்கத்தில் நடந்து சென்ற  சிறுவன்! அரிய நிகழ்வு

1 புரட்டாசி 2023 வெள்ளி 09:11 | பார்வைகள் : 14500


36 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடந்த அரிய நிகழ்வு ஒன்றை கின்னஸ் அமைப்பு தற்போது பகிர்ந்துள்ளது.

அதாவது அமெரிக்கா நாட்டில் 11 வயதான சிறுவன் ஒருவன், தூக்கத்தில் 160 கிலோ மீற்றர் தூரத்தை கடந்த நிகழ்வினை கின்னஸ் அமைப்பு பகிர்ந்துள்ளது.

1987ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி, இண்டியானா மாகாணம் பெருவைச் சேர்ந்த மைக்கேல் டிக்ஸன் என்கிற 11 வயது சிறுவன் தூக்கத்தில் நடந்து சென்றுள்ளார்.

ஆனால் அவர் 160 கிலோமீற்றர் தூரத்தை கடந்துள்ளார்.

காலில் காலணிகள் இல்லாமல் நடக்க ஆரம்பித்த சிறுவன், வீட்டிற்கு அருகில் சரக்கு ரயிலில் ஏறி வெகு தொலைவிற்கு சென்றுள்ளார்.

ஒரு இடத்தில் இறங்கிய அவர் ரயில் தடத்தில் நடந்து சென்றதுவும் சிறுவனுக்கு நினைவில் இல்லை.

ரயில்வே ஊழியர்கள் சிறுவன் நடந்து வருவதை கண்ட பின்னர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சிறுவனின் தாய் அவனை மீட்டுள்ளார்.

இது தொடர்பில் மருத்துவர்கள் தெரிவிக்கையில்,

‘இளம் வயதில் தூக்கத்தில் நடக்கின்ற வியாதி இருந்தாலும், குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அந்த வியாதி தாமாகவே மறைந்துவிடும்’ என தெரிவிக்கின்றன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்