Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச கால்பந்தில் ஓய்வை அறிவித்த பிரெஞ்சு ஜாம்பவான்

சர்வதேச கால்பந்தில் ஓய்வை அறிவித்த பிரெஞ்சு ஜாம்பவான்

17 ஆடி 2024 புதன் 08:39 | பார்வைகள் : 704


பிரெஞ்சு தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த கால்பந்தாட்ட ஜாம்பவான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

யூரோ 2024 பிரான்சுடனான தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று பிரெஞ்சு ஸ்ட்ரைக்கர் ஒலிவியர் ஜிரூட் (Olivier Giroud) ஏற்கனவே கூறியுந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, பிரான்ஸ் அணிக்கான தனது கடைசி ஆட்டம் ஸ்பெயினுக்கு எதிரான அரையிறுதி தோல்வியில் முடிந்தது. போட்டியில் இருந்து பிரான்ஸ் அணி பரிதாபமாக வெளியேறியது.

ஒலிவியர் ஜிரூட் பிரான்ஸ் வரலாற்றில் சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர். பிரெஞ்சு தேசிய அணியைத் தவிர, ஜிரூட் தற்போது MLS என்ற அமெரிக்க லீக்கில் விளையாடி வருகிறார்.

பிரான்ஸ் அணிக்காக 137 போட்டிகளில் விளையாடி 57 கோல்கள் அடித்து பிரான்ஸின் ஆல் டைம் முன்னணி கோல் அடித்த கால்பந்தாட்ட வீரராக ஜிரோட் உள்ளார்.

பிரான்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஹ்யூகோ லோரிஸ் (Hugo Lloris) மற்றும் லிலியன் துராம் (Lilian Thuram) ஆகியோருக்குப் பிறகு, ஜிரூட் பிரான்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் ஆவார்.

தனது ஓய்வை அறிவித்த Giroud தனது Instagram பதிவில், "வாழ்க்கையில் ஒரு பக்கம் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது... நான் மற்ற சாகசங்களுக்கு பறக்கிறேன். இனிமேல் நான் ப்ளூஸின் முதல் ஆதரவாளராக இருப்பேன். இந்த பிரெஞ்சு அணியுடன் நான் பணியாற்றிய 13 ஆண்டுகள் என் இதயத்தில் என்றும் மறையாது, இது எனது மிகப்பாரிய பெருமை மற்றும் எனது அன்பான நினைவகம்." என்று எழுதியுள்ளார்.

பிரான்ஸைத் தவிர, ஜிரூட் English Premier League கிளப்புகளான Arsenal, Chelsea மற்றும் இத்தாலிய கிளப் AC Milan ஆகியவற்றிற்காக விளையாடியுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்