கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த Disneyland Paris..!!

16 ஆடி 2024 செவ்வாய் 16:08 | பார்வைகள் : 13796
Disneyland Paris சென்ற ஜூலை 14 ஆம் திகதி இரவு கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளது. 1,630 ட்ரோன்களை பயன்படுத்தி இராட்சத மிக்கி மவுஸ் உருவம் ஒன்றை வானில் தோற்றுவித்து இந்த சாதனையை படைத்துள்ளது.
கற்பனைக் கதாப்பாத்திரம் ஒன்றின் (மிக்கி மவுஸ்) உருவத்தை ட்ரோன்கள் மூலம் இதுபோன்ற இராசத அளவில் காட்சிப்படுத்துவது இதுவே முதன் முறையாகும். அந்த சாதனையை நிகழ்த்தி, கின்னஸ் புத்தகத்தில் Disneyland Paris இடம்பிடித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது அதிகளவான சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கோடு இந்த சாதனையை நிகழ்த்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக இதேபோன்ற ஒரு நிகழ்வை இவ்வருட ஆரம்பத்தில் Disneyland Paris மேற்கொண்டிருந்தது. அதன்போது 500 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.