Paristamil Navigation Paristamil advert login

பரிசில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளாலான 'தடைகள்' - சிறைச்சாலை போல் காட்சியளிப்பதாக குற்றச்சாட்டு.!!

பரிசில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளாலான 'தடைகள்' - சிறைச்சாலை போல் காட்சியளிப்பதாக குற்றச்சாட்டு.!!

16 ஆடி 2024 செவ்வாய் 15:12 | பார்வைகள் : 9817


ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுக்காக, பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கோடு ஏராளமான இரும்பு கம்பிகளாலான தடைகள் (grilles) அமைக்கப்பட்டுள்ளன. அவை தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற உள்ள சென் நதிக்கரையில் இந்த தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 44,400 இரும்பு grilles இணைக்கப்பட்டு, அவை உருவாக்கப்பட்டுள்ளன.

அவை தோற்றத்துக்கு சிறைச்சாலைக் கம்பிகள் போல் இருப்பதாகவும், நகரின் அழகை கெடுப்பது போல் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டிகளின் போது பாதுகாப்பை உறுதி செய்யவும், வீதிகளில் அனுமதியற்ற வியாபாரங்களை தடுத்து நிறுத்தவும் அல்லது அவர்களைக் கைது செய்யவும் இந்த தடைகள் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, உணவக உரிமையாளர்கள், அருந்தகங்கள், சிறிய வியாபாரிகள் இதனால் பாதிப்படைவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்