Paristamil Navigation Paristamil advert login

யாழில் கோர விபத்து - இரு பெண்கள், குழந்தைக்கு காயம்

யாழில் கோர விபத்து - இரு பெண்கள், குழந்தைக்கு காயம்

16 ஆடி 2024 செவ்வாய் 10:14 | பார்வைகள் : 1082


யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குழந்தையொன்றும் இரு பெண்களும் காயமடைந்துள்ளனர். 

வீதியில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த இரு பெண்களை பின்னால் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு இளைஞர்கள் மோதி விட்டு, அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இளைஞர்கள் இருவரும் போதையில், நிதானமின்றி மோட்டார் சைக்கிளை விபத்தினை ஏற்படுத்தும் விதமாகவும் , வீதியில் பயணித்தோருக்கு இடையூறு விளைவிக்கும் விதமாகவும் ஓட்டிச் சென்றதாகவும், அவ்வாறு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தே , முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி விட்டுத் தப்பிச் சென்றதாக விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், விபத்தினை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை இனம் கண்டுள்ளதாகவும், விபத்தினை ஏற்படுத்திய இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்