சீனாவிற்கு பயணிகளுக்கான விசா நடைமுறையில் சில மாற்றங்கள்
16 ஆடி 2024 செவ்வாய் 09:46 | பார்வைகள் : 1302
சீனா வழியாக செல்லும் பயணிகளுக்கான விசா நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மற்ற நாட்டுக்கு செல்லும் பயணிகள் சீனாவில் 144 மணி நேரம் அதாவது 6 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். இந்த விசா தளர்வை பயன்படுத்தி சீனாவை சுற்றியும் பார்க்கவும் முடியும்.
இதன்மூலம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 54 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது ஹெனான் மாகாணம் செங்சூ சின்செங் விமான நிலையம், யுனான் மாகாணம் லிஜாங் விமான நிலையம் மற்றும் அங்குள்ள துறைமுகத்திலும் இந்த விசா தளர்வு நடைமுறை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இதன்மூலம் சீனாவில் விசா தளர்வு அளிக்கப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.