குப்பையை சுத்தம் செய்த பிரித்தானிய தம்பதியினருக்கு அபராதம்

15 ஆடி 2024 திங்கள் 13:17 | பார்வைகள் : 7356
இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் ஒரு தம்பதியர், தங்கள் வீட்டின் முன்னால் குவிந்துகிடந்த குப்பையை சுத்தம் செய்ததற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் கோபமடைந்துள்ளார்கள்.
இங்கிலாந்திலுள்ள Stoke-on-Trent என்னுமிடத்தில் வாழ்ந்துவருகிறார்கள், Veronika Mike, Zoltan Pinter தம்பதியர்.
தங்கள் வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள சாலையில் குப்பை குவிந்துகிடந்ததைக் கண்ட தம்பதியர், குப்பையை அகற்றியுள்ளார்கள்.
10 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு கவுன்சில் அதிகாரிகளிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளது.
அந்த தம்பதியர், வீட்டு குப்பையை முறைப்படி அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தவறிவிட்டதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.
அத்துடன், தம்பதியருக்கு ஆளுக்கு 600 பவுண்டுகள் வீதம், மொத்தம் 1,200 பவுண்டுகள், அதாவது, இலங்கை மதிப்பில் 4,71,105 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள் அதிகாரிகள்.
நல்லது செய்ததற்காக தங்களுக்கு அபராதம் விதித்துள்ளதால் கோபமடைந்துள்ளார்கள் தம்பதியர்.
Zoltan உடனடியாக அபராதத்தை செலுத்திவிட, Veronika மாதம் 100 பவுண்டுகள் வீதம், ஆறு மாதங்களுக்கு தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்திவருகிறார்.
இந்த மோசமான அனுபவத்துக்குப் பிறகு, இனி குப்பை குவிந்து நாற்றமெடுத்தால் கூட, குப்பையைத் தொடுவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் தம்பதியர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025