ஷாருக்கான் கேமியோ.. இயக்குனர் யார் தெரியுமா?
15 ஆடி 2024 திங்கள் 10:29 | பார்வைகள் : 550
ஒரே படத்தில் விக்ரம், தனுஷ் மற்றும் பகத் பாசில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் நடித்த இருப்பதாகவும் கூறப்படுவது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் போலவே தற்போது தமிழ் திரைப்படங்களிலும் ஒரே படத்தில் பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர் உட்பட பல படங்கள் மல்டி ஸ்டார் படங்களாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் அட்லி இயக்க உள்ள அடுத்த படமும் மல்டி ஸ்டார் படம் என்றும், இந்த படத்தின் முக்கிய வேடத்தில் விக்ரம் மற்றும் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் , பகத் பாசிலும் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் இந்த படத்தில் நடிப்பதற்கு தனக்கு சம்பளமே தேவையில்லை என்று அவர் கூறி இருப்பதாகவும் ஆச்சரிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் சல்மான்கான் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது விக்ரம் மற்றும் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.