கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டி: வெற்றிவாகை சூடிய அர்ஜென்டினா...
15 ஆடி 2024 திங்கள் 07:33 | பார்வைகள் : 844
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று வெற்றி கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மியாமியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மிகவும் ஆக்ரோஷமாக மோதின.
மியாமியில் நடைபெறும் இந்த போட்டியில் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி சமனில் நீடித்தது.
இரண்டாம் பாதியின் 66வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கால் தசையில் காயம் அடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அவருக்கு பதிலாக Nicolás González மாற்று வீராக களத்தில் இறக்கப்பட்டார்.
இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டனர், இருப்பினும் ஆட்டத்தின் 90 நிமிட முடிவில் இரு அணிகளாலும் முன்னிலை பெற முடியவில்லை.
இதனால் போட்டியில் கூடுதல் நேரம் சேர்க்கப்பட்டது. இறுதியில் ஆட்டத்தின் 112வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மாற்று வீரராக களத்தில் இறங்கிய Lautaro Martínez கோல் அடித்து அமர்களப்படுத்தினார்.
இதன்மூலம் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்து வெற்றி கோப்பையை கைப்பற்றினர்.