Sarcelles : ஸ்கூட்டரை மோதித்தள்ளிய மகிழுந்து - பெண் ஒருவர் பலி..!

14 ஆடி 2024 ஞாயிறு 19:00 | பார்வைகள் : 13266
ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த பெண் ஒருவரை மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஜூலை 13, நேற்று சனிக்கிழமை காலை இச்சம்பவம் Sarcelles (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. rue Émile-Zola வீதியில் காலை 5.30 மணி அளவில் பயணித்துக்கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றை மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியது.
இதில் ஸ்கூட்டரில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்பட்டமைக்குரிய காரணம் தொடர்பில் தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை.
மருத்துவ உதவிக்குழுவினர் அப்பெண்ணைக் காப்பாற்ற முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1