பிரபல இயக்குனரின் அதிரடி மாற்றம்..!

12 ஆனி 2024 புதன் 14:07 | பார்வைகள் : 5635
கடந்த சில நாட்களுக்கு முன்னால் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நயன்தாரா நாயகி ஆக நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும் தமிழ் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை சமந்தா ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அதன் பிறகு ’நீதானே என் பொன் வசந்தம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார் என்பதும் அதுவும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிரடி த்ரில் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 15ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் மம்முட்டி 20 ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மம்மூட்டி மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025