தென் கொரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

12 ஆனி 2024 புதன் 08:14 | பார்வைகள் : 8724
தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் புவான் அருகே இன்று 12 ஆம் திகதி அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட் (4.8 Magnitude) அலகுகளாகப் பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 8 கிலோமீற்றர் (5 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், தென் கொரியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
எனினும், வடக்கு ஜியோல்லா மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்திருப்பார்கள் என கூறப்படுகின்றது.
மேலும் , வீட்டின் ஜன்னல்களில் உடைப்பு மற்றும் பொருள்கள் கீழே விழும் அளவுக்கு இந்த நிலநடுக்கம், வலுவாக இருந்ததாக தென் கொரியாவின் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3