Neuilly-sur-Seine : ஆறு பேர் கைது..!
12 ஆனி 2024 புதன் 10:00 | பார்வைகள் : 12210
செல்வந்தர் ஒருவரை கடத்த முற்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜூன் 11 ஆம் திகதி சனிக்கிழமை அவர்கள் Neuilly-sur-Seine (Hauts-de-Seine) நகரில் வைத்து கைது செயப்பட்டனர். மிக வெளிப்படையான கொள்ளைச் சம்பவத்துக்கு அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், செல்வந்தரின் வீட்டுக்குள் காத்திருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
அவர்கள் குறித்த செல்வந்தரைக் கடத்தி அவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையிலேயே அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து போலி கைத்துப்பாக்கியும், தடிகள் மற்றும் கையுறை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan