இலங்கையில் கோழி இறைச்சி கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை
11 ஆனி 2024 செவ்வாய் 14:19 | பார்வைகள் : 5414
இலங்கையில் கோழி இறைச்சி கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகள் இத்தினங்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அதன் சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்தார்.
இவ்வாறான கோழி இறைச்சியை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சஞ்சய் இரசிங்க மேலும் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan